தமிழ்நாடு

கொரோனா பரவல் எதிரொலி: கும்பகோணம் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் இரு மடங்கு அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்றும் இதுவரை 185 மாணவ மாணவிகள் அந்த பகுதியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதால் கொரோனா வைரஸ் குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கல்லூரிகளுக்கு இன்னும் வகுப்புகள் நடந்து கொண்டிருப்பதால் கொரோனா வைரஸ் கல்லூரி மாணவர்களிடையே பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

இந்த நிலையில் கும்பகோணம் அருகே கோவிலாச்சாரி என்ற பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த கல்லூரிக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

.மேலும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்படும் கல்லூரிகளும் விரைவில் விடுமுறை அளிக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பள்ளிகளை போலவே கல்லூரிக்கும் விடுமுறை விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version