தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை!

Published

on

அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக 13 தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியது. இது தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரை பகுதிகளில் மற்றும் ஆந்திர கடல் பகுதி வழியாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கன்னியாகுமரி உள்பட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரியில் இன்னும் மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை இன்று நேரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது/ மேலும் குமரி மாவட்டத்தில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending

Exit mobile version