இந்தியா
வாவ்.. கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2 குறைப்பு!
சென்னை: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.00 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தது. இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். இதனால் அங்கு பெட்ரோல் விலை 81 ரூபாய்க்கு விற்கப்பட வாய்ப்புள்ளது.