இந்தியா

பாஜகவுக்கு குமாரசாமி ஆதரவு: கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு!

Published

on

கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி நேற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.

இந்த பரபரப்புகள் அனைத்தும் அடங்குவதற்குள் அடுத்த பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை கலைத்த பாஜகவுக்கு மஜத ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மதசார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் ஜி.டி. தேவ கவுடா தெரிவித்தபோது, எங்கள் கட்சியின் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர். மீதமுள்ளவர்கள் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு கட்சியை வளர்க்க பரிந்துரைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

இது கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குமாரசாமி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என கர்நாடக காங்கிரஸ் நினைத்துப்பார்த்திருக்காது. குமாரசாமியின் இந்த முடிவுக்கு காரணம் ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராஜினாமா செய்து குமாரசாமி அரசுக்கு நெருக்கடி கொடுத்த எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் சித்தராமையாவுக்கு விசுவாசமானவர்கள். காங்கிரஸ் நினைத்திருந்தால் அந்த எம்எல்ஏக்களை சமாதனப்படுத்தி ஆட்சியை தக்க வைத்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அதற்கான முயற்சியை எடுக்கவில்லை என குமாரசாமி தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version