சினிமா

குக்கூ பட நாயகி பட விழா கவர்ச்சி உடையில் வந்தார்!

Published

on

இதுவரை கவர்ச்சி, கதாப்பாத்திரங்களைத் தவிர்த்து வந்த மாளவிகா தற்போது தனது முடிவைத் தளர்ச்சி கவர்ச்சிக்குப் பச்சை கொடி காட்டியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளது.

மலையாளத்தில் சில படங்களில் நடித்துவிட்டு ராஜுமுருகன் இயக்கிய குக்கூ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர் நடிகை மாளவிகா நாயர். தற்போது அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அவர் தெலுங்கில் அறிமுகமாகி அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள மாளவிகா நாயர், நவம்பர் 17-ம் தேதி விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டாக்ஸிவாலா படத்தில் நடித்திருந்தார். மேலும், பி.ஏ படித்தபடியே சினிமாவில் நடித்து வந்த மாளவிகா நாயர், இனிமேல் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் இனி கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். சமீபத்தில் ஒரு பட விழாவில் பங்கேற்ற அவர் கவர்ச்சியான உடை அணிந்து வந்திருந்த புகைப்படங்கள் இதோ..

seithichurul

Trending

Exit mobile version