சினிமா செய்திகள்

புவி வெப்பமயமாதலை சொல்லும் குச்சி ஐஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Published

on

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகர் பரணி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களிடையே மேலும் பிரபலமானார். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் புகழ் பரணி நடிப்பில் உருவாகியுள்ள இந்த குச்சி ஐஸ் படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

குச்சி ஐஸ் ஏதோ சாதாரண படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த பலருக்கும் அதன் ஃபர்ஸ்ட் லுக், வேறுவிதமான எதிர்பார்ப்பையும் ஆச்சர்யத்தையும் வழங்கியுள்ளது.

குச்சி ஐஸின் மேல் புறம் பூமியாகவும், கீழ் புறம் நெருப்பு உருக்கி பூமியை அழித்து வருவதை ஆழமான சிந்தனையுடன் வடிவமைத்துள்ளனர். இயக்குநர் ஜெயபிரகாஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள குச்சி புவி வெப்பமயமாதல் குறித்த பாடத்தை எடுக்கப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version