தமிழ்நாடு

சிவி சண்முகம் மீது பாஜக தலைமையிடம் புகார்: கே.டி.ராகவன் தகவல்

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் மீது பாஜக தேசிய தலைமையிடம் புகார் அளிப்போம் என பாஜக பிரமுகர் கேடி ராகவன் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றபோது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ’அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் காரணம் என்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் என்றும் பேசினார். அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவை அக்கட்சியின் பிரமுகர் ஒருவரே கடுமையாக விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று இது குறித்து பதிலளித்த பாஜக பிரமுகர் கேடி ராகவன், சிவி சண்முகத்தின் கருத்து கூட்டணி தர்மத்திற்கான கருத்து அல்ல என்றும் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை அதிமுக தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கூட்டணி கட்சியினர் வெற்றிக்காக பாஜக தொண்டர்கள் 100% உழைத்தனர் என்றும் பாஜகவின் உழைப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் சிவி சண்முகத்தின் கருத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குறித்து பாஜக தேசிய தலைமையிடம் புகார் அளிப்போம் என்றும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கேடி ராகவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது அதிமுக தலைமையிடம் புகார் அளிக்காமல் பாஜக தேசிய தலைமையிடம் புகார் புகார் அளிப்போம் என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version