சினிமா

ஜென்டில்மேன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார்?.. கண்டுபிடித்தால் உங்களுக்கு தங்க காசு பரிசு..

Published

on

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை அதாவது அதிக பொருட் செலவில் படங்களை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இயக்குனர் ஷங்கரை ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இவர்தான் இயக்குனராக அறிமுகம் செய்தார். அதன்பின் அவரின் இயக்கத்தில் காதலன் படத்தையும் தயாரித்தார். மேலும், சூரியன், வசந்தகால பறவை, காதல் தேசம், ரட்சகன் என சில படங்களை தயாரித்தார்.

ரட்சகன் படத்தால் அவருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, அதன்பின் அவர் கடந்த பல வருடங்களாக திரைப்படம் தயாரிக்கும் பணியில் ஈடுபடவில்லை. ஆனால், தற்போது ஜென்டில்மேன் 2 எடுக்கிறேன் என களம் இறங்கியுள்ளார் குஞ்சுமோன்.

gentleman

மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என சரியாக கணித்து சொல்லும் முதல் 3 ரசிகர்களுக்கு தங்க காசு பரிசளிக்க போவதாக அறிவித்துள்ளார். டிவிட்டரில் #G2MusicDirector என்கிற ஹேஷ்டேக்கில் நீங்கள் இதற்கு பதிலளிக்கலாம்

ஜென்டில்மேன் 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version