இந்தியா

குரங்கை பேருந்து ஓட்ட விட்ட அரசு ஓட்டுநர் சஸ்பெண்ட்! (வீடியோ)

Published

on

தாவனகரே: கர்நாடக மநிலம் சாலை போக்குவரத்துத் துறை ஓட்டுனர் ஒருவர் குரங்கிடம் ஸ்டியரிங்கை அளித்துவிட்டு பேருந்து ஓட்டிய வீடியோ இணையதளத்தில் வைரலானதை அடுத்து இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அக்டோபர் 1-ம் தேதி கேஎஸ்ஆர்டிசி தாவனகரே பிரிவை சேர்ந்த ஒட்டுனர் பேருந்தை ஓட்டும் போது குரங்கிடம் ஸ்டியரிங்க அளித்துவிட்டு இயக்கியுள்ளார். இந்த 55 நொடி விடியோவை பேருந்தில் பயணம் செய்த பயணியே விடோவாகப் படம் பிடித்துள்ளார்.

குரங்கு ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டு பேருந்தை ஓட்ட, ஓட்டுநரோ கியரை மாற்றுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன சில மணி நேரத்தில் கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் ஓட்டுநரை பணி இடை நீக்கம் செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version