தமிழ்நாடு

ஒட்டப்பிடாரத்தில் சுயேட்சையாக நின்ற ‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா?

Published

on

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் வரை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ‘புதிய தமிழகம்’ கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி கடைசி நேரத்தில் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார்.

‘தேவேந்திர குல வேளாளர்’ பெயர் மாற்ற விவகாரத்தில் தமிழக அரசுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் கூட்டணியிலிருந்து வெளியேறினார். எப்போதும் போல தனது சொந்த தொகுதியான ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி, இந்த முறை தனித்துப் போட்டியிட்டார். சென்ற முறையும் இதே தொகுதியில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் அவர் அதிமுக கூட்டணியில் தான் இருந்தார்.

இந்நிலையில் இந்த முறை ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளர், சண்முகைய்யா, 73,110 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை அடுத்து அதிமுகவின் பி.மோகன், 64,600 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்தார். இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் வைகுண்டமாரி 22,413 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்தார். இதையடுத்து நான்காவது இடத்தில் தான் கிருஷ்ணசாமி, 6,544 வாக்குகள் பெற்று நான்காவது இடத்துக்கு வந்தார்.

கிருஷ்ணசாமி இப்படி டெப்பாசிட் இழந்து தோல்வியடைந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version