தமிழ்நாடு

நீ என்ன சாதி என கேட்டுவிட்டு நிரூபர் மீது புகாரும் அளித்த கிருஷ்ணசாமி!

Published

on

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் 28-ஆம் தேதி தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கேள்வி கேட்ட நிருபரை பார்த்து கிருஷ்ணசாமி நீ என்ன ஜாதி என கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கிருஷ்ணசாமி சார்பில் அந்த நிரூபர் தன்னை தாக்க வந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிட்டார். இவர் அங்கு 355870 வாக்குகள் வாங்கினார். ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார் 476156 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

இதனையடுத்து தேர்தல் தோல்விக்கு பின்னர் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் கிருஷ்ணசாமி. இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தனர். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த கிருஷ்ணசாமி சில இடங்களில் ஒருமையிலும், பல கேள்விகளுக்கு கோபமாகவும் பதிலளித்தார்.

ஒரு கட்டத்தில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவரை பார்த்து கோபமாக நீ என்ன ஊர், என்ன ஜாதி என சர்ச்சைக்குறிய கேள்வியை கேட்டார். இதனால் சக பத்திரிக்கையாளர்கள் கோபமடைய அந்த இடம் பரபரப்பானது. இதனையடுத்து கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளரை பார்த்து என்ன சாதி என கேட்டதற்கு பத்திரிக்கையாளர் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. அரசியல் கட்சி தலைவர்களும் கிருஷ்ணசாமியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணசாமி சார்பில் கேள்வி கேட்ட நிரூபர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிருபர்கள் தன்னை தாக்க வந்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version