சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா!

Published

on

ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் ’83’ படத்தில் அதிரடி துவக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பாலிவுட் இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் முதன்மை ஹீரோவாக நடிக்கவுள்ள படம் ‘83’. இந்திய கிரிக்கெட் அணி கபில் தேவ் தலைமையில் முதன்முறையாக 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.

இந்த படத்தில் கேப்டன் கபில்தேவாக பத்மவாத் படத்தின் வில்லனும் நடிகை தீபிகா படுகோனேவின் கணவனுமான நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.

மேலும், இந்த படத்தில் அதிரடி துவக்க ஆட்டக்காராரும் உலக கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா முதன்முறையாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார்.

மேலும், பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அடுத்த ஆண்டு 2020ல் இந்த படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version