தமிழ்நாடு

இந்துக்களை சாதியாக பிரித்தவர்தான் கிருஷ்ண பகவான்: திருமா பேச்சு!

Published

on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்து மதத்தை சாதியாக பிளவு படுத்தியவர் கிருஷ்ண பகவான்தான் என்று பேசியுள்ளார்.

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவில் பங்கேற்றார் திருமாவளவன். தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய போது, ‘கிறித்துவத்தை, இஸ்லாத்தை, பௌத்தத்தை நம்மால் ஏற்க முடிகிறது. அதற்கு காரணம் இந்த சமயங்களில் அல்லது மதங்களில் இருக்கும் சமத்துவக் கோட்பாடுதான். ஆனால், இந்து மதத்தில் அப்படி இல்லை.

இந்து மதம் சாதிப் படிநிலைகளைக் கொண்டது. கிருஷ்ண பகவான்தான், பகவத் கீதை மூலம் இந்துக்களை சாதியாக பிரித்தவர் என்று சொல்லப்படுகிறது. சிலர், கிருஷ்ண பகவான் அப்படி சொல்லவில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால், இந்து மதத்தில் சாதிப் படிநிலை இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. அது நடைமுறையில் இருக்கிறது. நான் இந்துவாக இருக்கும் காரணத்தினால்தான் தொடர்ந்து இந்த மதத்தை விமர்சித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version