இந்தியா

இன்றைய வேலைநீக்க செய்திகள்.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட 700 ஊழியர்கள்..!

Published

on

வேலை வாய்ப்பு செய்திகளை தினந்தோறும் ஊடகங்களில் வேலை இல்லாதவர்கள் பார்த்து வரும் நிலையில் வேலையில் உள்ளவர்கள் இன்றைய வேலை நீக்க செய்து ஏதாவது வந்திருக்கின்றதா என ஊடகங்களை தினசரி பார்க்கும் நிலை வந்துவிட்டது.

உலகம் முழுவதிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை தினம் தோறும் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருவதால் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு ஜனவரி பிறந்ததிலிருந்து சுமார் 300 நிறுவனங்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து உள்ளது என்றும் இதனால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி விகித உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் வேலை நீக்க நிறுவனங்களின் பட்டியலில் தற்போது KPMG நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் தங்களிடம் பணிபுரிந்த 700 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது KPMG நிறுவனத்தின் இரண்டு சதவீத ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை நீக்கப்பட்ட 700 ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இது குறித்து KPMG செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்ற போது அதில் தேவையான சிக்கன நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது என்றும் அதில் ஒரு பகுதி தான் 700 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் எங்கள் வணிகம் மற்றும் கண்ணோட்டம் வலுவாக உள்ளது என்றும் நிறுவனத்தின் சீர்திருத்தற்கு பிறகு லாபகரணமாக இயங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சமீபத்திய ஆண்டுகளில் எங்கள் நிறுவனம் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கான சலுகைகள் குறித்த எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூகுள், மைக்ரோசாப்ட், லிங்க்ட்-இன், ஃபேஸ்புக், டுவிட்டர், உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை மிக்க நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் KPMG நிறுவனமும் சேர்ந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version