தமிழ்நாடு

பங்குச்சந்தையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தாரா கேபி அன்பழகன்?

Published

on

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பங்குச்சந்தையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக அவரது வீட்டில் சோதனை செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் அன்பழகன் வீட்டில் இன்று அதிகாலை சோதனை செய்யப்பட்டு வருகிறது. அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 57 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கேபி அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் அவரது மனைவி மற்றும் மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனையில் அன்பழகன் ஏராளமான பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாக கண்டுபிடித்து உள்ளதாகவும் அதுமட்டுமின்றி அவரது மனைவி மகன் பெயரில் மருத்துவமனை போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தெலுங்கானா கிரானைட் குவாரிகளில் கேபி அன்பழகனுக்கு 80 சதவீதம் பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version