தமிழ்நாடு

சந்தோசமாக பறையிசைத்த கவுசல்யா.. இது வாழ்வின் போராட்ட கீதம்!

Published

on

சென்னை: உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து கணவர் சக்தியுடன் பறையிசைத்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சாதி ஆணவத்தால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.  தனியாக சட்ட போராட்டம் மூலம் போராடிய கவுசல்யா குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார்.

அதன்பின் இன்று கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.

இதையடுத்து தம்பதிகள் நேராக சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செய்தனர். கோவை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தனர். இந்த திருமணம் சடங்குகள் இன்றி இணையேற்பு விழா என்ற பெயரில் கருப்பு உடை அணிந்து நடந்த சுயமரியாதை திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் நிமிர்வு கலையக பறையிசை கலைஞர்களுடன் சேர்ந்து அதன்பின் கவுசல்யா பறையிசைத்தார். சக்தியும் அவர்களுடன் உடன் இருந்தார். அவர்கள் பறையை இசைத்துவிட்டு பறை கலைஞராய் பெருமை கொள்வோம் என்று கோஷமிட்டனர். இது நிகழ்வு வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version