தமிழ்நாடு

இன்று முதல் கோவை – ஷீரடி தனியார் சிறப்பு ரயில்: கட்டணம் இவ்வளவா?

Published

on

இன்று முதல் கோவையில் இருந்து ஷீரடி வரை தனியார் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும், ஆனால் இதில் கட்டணம் மிகப்பெரிய அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் வசம் சிறப்பு ரயில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று முதல் கோவையிலிருந்து ஷீரடிக்கு இயக்கப்படுகிறது.

வாரம் ஒரு முறை மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இயக்கப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது. இந்த ரயில் இன்று இயங்க உள்ளதை அடுத்து நேற்று ரயில்வே அதிகாரிகள் இந்த ரயிலை ஆய்வு செய்தனர். இந்த ரயிலில் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு வசதிகள், செல்போன் சார்ஜ் மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை, படுக்கை ஆகியவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

trainஇந்த ரயிலில் பயணம் செய்வதற்கு ரயில்வே துறையின் ரயிலில் உள்ள கட்டணத்தை விட மிக அதிகம் என்பது தான் ஒரு அதிர்ச்சியான தகவல். இந்த ரயிலின் பயண கட்டணம் குறித்து தற்போது பார்ப்போம்.

கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல ஸ்லீப்பர் கட்டணம் ரூ. 1,280 . ஆனால் தனியார் நிறுவனம் வசூலிக்கும் ரெயில் கட்டணம் ரூ.2,500 மற்றும் பேக்கேஜ் கட்டணமானது. 4,999.

மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.2,360 ஆனால் தனியார் ரெயில் கட்டணம் ரூ. 5,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 7,999.

குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820 ஆனால், தனியார் ரெயில்கட்டணம் ரூ.7000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 9,999.

குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190 அனால் தனியார் ரெயில் கட்டணம் ரூ.10,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 12,999 வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version