தமிழ்நாடு

திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்? சிதறுகிறதா அதிமுக?

Published

on

சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கடந்த சில நாட்களாக ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்து மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அக்கட்சியில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் எடப்பாடி அணிக்கு பெரும் சவால் கொடுத்து வந்த நிலையில் திடீரென அவர் ஓபிஎஸ் அணியிலிருந்து அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் இபிஎஸ் அணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படும் போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவுக்காகத்தான் அதிமுகவில் இருந்தேன் என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை என்னை அதிர்ச்சியடைய செய்தது என்றும், ஜெயலலிதாவை ஓபிஎஸ் இபிஎஸ் நினைத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும் அவர்கள் ஜெயலலிதாவை காப்பாற்றாமல் தங்கள் பதவியை பதவியை தக்க வைப்பதில் மட்டும் குறியாக இருந்தனர் என்றும் இரு தரப்பினரையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் கோவை மண்டல திமுக பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் அவரது முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக இன்னொரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கின்றது.

seithichurul

Trending

Exit mobile version