தமிழ்நாடு

கொங்குநாடா?- பாஜகவுக்கு அதிமுக நேரடி எச்சரிக்கை

Published

on

தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில வலதுசாரி சார்புடையவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.

திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து, இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று அழைத்து வருகிறது. இப்படிச் சொல்வதால் கொதிப்படைந்துள்ள வலதுசாரிகள், ‘கொங்குநாடு’ கோஷத்தை எழுப்பி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவை எச்சரிக்கும் வகையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘திராவிட நாடு என்கிற கோஷம் ஒரு கட்டத்தில் எழுந்தது. அதை பேரறிஞர் அண்ணா முன்னெடுத்தார்.

ஆனால், நாடு வளரும் போது, அதில் தமிழ்நாடு அதில் சிறந்த மாநிலமாக வர வேண்டும் என்று அப்போதைய மாபெரும் தலைவர்களே திராவிட நாடு சிந்தனையை ஒதுக்கி வைத்து விட்டார்கள். அந்த வகையில் இந்த நாட்டின் மீதும், அதன் வளர்ச்சியின் மீதும் அந்த தலைவர்களுக்குப் பற்று இருந்தது.

எனவே பேரறிஞர் அண்ணா எடுத்த நிலைப்பாடு தான் அதிமுகவின் நிலைப்பாடாகவும் இருக்கும். இந்த சூழலில் கொங்கு நாடு என்கிற விஷம்ப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது. அதை உடனே யாராக இருந்தாலும் கைவிட வேண்டும். சிறு சிறு மாநிலமாக பிரிக்கப்படும் போது மாநிலத்தின் பலம் குறையும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குமரி முதல் சென்னை வரை அனைவரும் தமிழ்நாடு நம் நாடு என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். எனவே காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது’ என்று கறாராக கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version