தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து பிரிகிறதா ‘கொங்கு நாடு’? முன்னணி பத்திரிகையில் செய்தி!

Published

on

தமிழின் முன்னணி பத்திரிகை ஒன்று தமிழகத்திலிருந்து கொங்கு நாடு என பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தியை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும் திமுக கூறிவரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுப்பதற்காக தமிழகத்தை இரண்டாக பிரித்து ’கொங்கு நாடு’ என்ற புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்கு மண்டல பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களை சேர்த்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க இருப்பதாகவும் இந்த மண்டலத்தில் தற்போது 10 லோக்சபா தொகுதிகள் மற்றும் 61 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் மேலும் சில தொகுதிகளை சேர்த்து 90 சட்டசபை தொகுதிகள் அடங்கிய ’கொங்கு நாடு’ என்ற புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக படுதோல்வியை சந்தித்து இருந்தது என்பதும் இந்த தொகுதிகளில் பாஜக நல்ல வாக்குகளை பெற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பாஜக பிரபலங்களான வானதி சீனிவாசன், எல். முருகன், அண்ணாமலை ஆகியோர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதனால் திமுகவுக்கு பாஜக நேரடியாக போட்டியை ஏற்படுத்தலாம் என்ற திட்டமும் உருவாகி இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு பதிலடி கொடுப்பதற்காக தான் கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்த சமீபத்தில் டாக்டர் மகேந்திரன் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை கொங்கு மண்டலம் என்ற புதிய யூனியன் பிரதேசம் உருவானால் அதில் வெற்றி பெறுவது திமுகவா? அல்லது பாஜகவா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version