செய்திகள்

கோமளவள்ளி ஜெயலலிதாவின் பெயரே இல்லை: ரகசியம் உடைத்த டிடிவி தினகரன்!

Published

on

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வந்தது. இந்த படத்தில் வில்லியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்திருப்பார். இதில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி. இதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்ததாலும், இந்த படம் அரசியல் கதையை கொண்ட படமானதாலும் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேண்டுமென்றே ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி பெயரை வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளனர் என குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் பெயரே இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னி பரீட்சை நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தினகரன் கூறியது பின்வருமாறு.

ஜெயலலிதா பெயர் கோமளவள்ளியே கிடையாது என்பது எனக்கே தெரியும். 2002 அல்லது 2003-ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர், ஜெயலலிதாவை கோமளவள்ளி எனக்கூறி விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவே என்னிடம், ஏன் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள். நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே. ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று என்னிடம் கேட்டார். மேலும் நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராகப் படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன் என்றார் தினகரன்.

Trending

Exit mobile version