இந்தியா

மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்: காரணம் இதுதான்!

Published

on

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து மேற்கு வங்க மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார் என்பது தெரிந்ததே. இதனையடுத்து முதல்வர் மம்தா இதுகுறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

நந்திகிராமில் பாஜக வெற்றி பெற்றதை எதிர்த்து மம்தா தொடர்ந்த வழக்கை நீதிபதி கௌசிக் என்பவர் விசாரணை செய்த நிலையில் மம்தா பானர்ஜி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீதிபதி கெளசிக் பாஜக தலைவர்களுடன் தொடர்பு உள்ளவர் என மம்தா பானர்ஜி வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தனது மனுவை நீதிபதி கெளசிக் விசாரிக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவருக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதியின் மீதே குற்றஞ்சாட்டியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version