கிரிக்கெட்

பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா: கேப்டன் மோர்கன் பொறுப்பான ஆட்டம்!

Published

on

நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் அவர்களின் பொறுப்பான ஆட்டம் காரணமாக கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தநிலையில் 124 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. தொடக்க ஆட்டக்காரரான கில் 9 ரன்களிலும் ரானா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆன நிலையில் ராகுல் திரிபாதி மற்றும் கேப்டன் இயான் மோர்கன் ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இறுதியில் அந்த அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இயான் மோர்கன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இன்று யார் வெற்றி பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இடத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version