கிரிக்கெட்

‘கோலி, பாபர் அசாமை பார்த்து கத்துக்கணும்’- வம்பிழுக்கும் பாக். முன்னாள் வீரர்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார். மூன்று ஃபார்மெட்டுகளிலும் 50க்கு மேல் பேட்டிங் சராசரி வைத்துள்ளார் கோலி. அப்படிப்பட்ட கோலி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாமைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகிப் ஜாவெத். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

கோலிக்கும் பாபர் அசாமுக்கும் அடிக்கடி ஒப்பீடுகள் வருவது சகஜம் தான். காரணம், பாகிஸ்தான் அணியின் விராட் கோலி என்று தான் பாபர் அசாம் வர்ணிக்கப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருவருக்கும் இடையில் யார் சிறந்த வீரர் என்கிற ஒப்பீடு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

இப்படியா சூழலில் ஜாவெத், ‘கோலி சில பேட்டிங் நுட்பங்கள் குறித்த விஷயங்களில், பாபர் அசாமை விட பின் தங்கியுள்ளார். அவரை விட பாபர் ஆசாம் சிறப்பாக செயல்படுகிறார். ஆஃப் சைடில் எப்படி விளையாடுவது என கோலி, பாபர் ஆஸமிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதே போல உடலை எவ்வாறு பேண வேண்டும் என்பதை கோலியிடம் இருந்து பாபர் ஆசம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version