சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’: சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம்

Published

on

பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ’கோடியில் ஒருவன்’ என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி தியேட்டர்களில் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த படங்களில் ஒன்று ’கோடியில் ஒருவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயாராகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை ’கோடியில் ஒருவன்’ திரைப்படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியானது என்பதும் அந்த வீடியோவில் டியூஷன் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராக வரும் விஜய் ஆண்டனியை ரவுடிகள் சுற்றி நின்று அடித்து நொறுக்குகிறார்கள் என்பதும் ஆனால் திருப்பி அடிக்காமல் விஜய் ஆண்டனி அமைதி காத்து, ‘நமது இலக்கை நாம் அடையும் வரை எந்த தடை வந்தாலும் அதை கண்டு கொள்ளக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறும் காட்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ள ’கோடியில் ஒருவன்’ திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே எடிட்டிங் பணியையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா என்பவர் இசையமைத்துள்ளார் என்பதும், உதயகுமார் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி உள்ளது என்பதும் செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version