தமிழ்நாடு

கொடநாடு கொள்ளை வழக்கில் விவேக்கிடம் விசாரணை: அடுத்தது சசிகலாவா?

Published

on

தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை வளையத்திற்குள் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. அது குறித்து கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் சயான் மற்றும் மனோஜ் ஆகியோர்களிடமும் கொலை செய்யப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரரிடமும் விசாரணை நடந்துள்ளது

இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக் ஜெயராமன் இடம் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொடநாடு பங்களாவுக்கு அடிக்கடி விவேக் சென்று வந்துள்ளார் என்பதால் அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அந்த பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

விவேக்கை அடுத்த சசிகலாவையும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர காவல் துறையினர் திட்டமிட்டு உள்ளதாகவும் விரைவில் அவரிடமும் விசாரணை செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கொள்ளை நடந்த நாளில் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்ததால் அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.

seithichurul

Trending

Exit mobile version