தமிழ்நாடு

சசிகலா குடும்பம் படாதபாடு படுத்துகிறது: எடப்பாடி பழனிச்சாமி குமுறல்!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளது என சயன் மற்றும் மனோஜ் குற்றம் சாட்டுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஐந்து கொலை செய்துள்ளார் என தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ அதிரடியை கிளப்புகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆவணப்படம் தமிழக அரசியலில் எடப்பாடிக்கு எதிராக புயலை கிளப்பியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் தலைவலியாக மாறிய இந்த விவகாரத்தில் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றதான் எடப்பாடி கூலிப்படையை அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்கள் அனைத்தும், அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு எதிரானவை எனவும் தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவத்திற்கு கூலிப்படையைச் சேர்ந்த சயன் என்பவன் தான் காரணம். கொடநாட்டில் எப்படி கொள்ளையடித்தோம் என்று தெளிவாக கூறிவிட்டான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அது யார் என்பது உங்களுக்கே தெரியும் என சசிகலாவை மறைமுகமாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடத்தில் ஆதாரம் இருந்தால் நம்மை விட்டுவைப்பார்களா? ஏற்கனவே அந்த குடும்பம் நம்மை படாதபாடு படுத்துகிறார்கள். இவ்வளவு ஆதாரம் இருந்தால் என்ன பாடுபடுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

Trending

Exit mobile version