தமிழ்நாடு

100% தடுப்பூசி: தமிழ்நாட்டில் சாதனை

Published

on

தமிழ்நாட்டில் முதல் முறையாக கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அவர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நகராட்சியாக கொடைக்கானல் திகழவுள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதை அடுத்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நிலையில் கொடைக்கானல் பகுதியில் 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவிலேயே முதல் முறையாக 100% தடுப்பூசி செலுத்திய நகராட்சி என்ற பெருமையை கொடைக்கானலுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானலில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதே இந்த சாதனைக்கு காரணமாக உள்ளது. அதேபோல் பழனியில் 68% பேர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் விரைவில் இந்நகரமும் 100% என்ற இலக்கை அடையும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே பழங்குடி மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் நீலகிரி என்ற பெருமையை கிடைத்த நிலையில் தற்போது கொடைக்கானல் நகராட்சியில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து இன்னொரு பெருமையும் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version