தமிழ்நாடு

தமிழகத்தில் விரைவில் புதிய மாநகராட்சி, நகராட்சிகள் உதயம்: அமைச்சர் தகவல்

Published

on

தமிழ்நாட்டில் விரைவில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகும் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த நேரு, ‘தமிழ்நாட்டில் இப்போது 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் உள்ளது. இப்படி விடுபட்ட மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

மேலும் புதிய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை உருவாக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. தற்போதைய சூழலில் இன்னும் ஓரிரு மாதங்களில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்’ என்று தகவல் கூறியுள்ளார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து நகர்ப்புறங்களில் விடுபட்ட பராமரிப்புப் பணிகள், மற்றும் சீரமைப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது பல மாவட்டங்களில் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதால், அந்த மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி அனைத்து மாவட்டங்களிலும் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version