கிரிக்கெட்

கொல்கத்தாவின் அதிரடி பந்துவீச்சால் லாபமடையும் சி.எஸ்.கே

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி அதிரடியாக பந்துவீசி டெல்லி அணியை 127 ரன்களுக்குள் சுருட்டி உள்ளது. இந்த நிலை சிஎஸ்கேவுக்கு சாதகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் டெல்லி அணி களத்தில் இறங்கியது.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மித் மற்றும் தவான் ஓரளவு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த போதிலும் அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். கேப்டன் ரிசப்பண்ட் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 39 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

இதனையடுத்து டெல்லி அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததை அடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியின் பெர்குசன், சுனில் நரேன் மற்றும் வெங்கடேச ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 128 என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி இந்த போட்டியை மிக எளிதில் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வென்றால் அந்த அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் டெல்லி அணி இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் சென்னை அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் இது அந்த அணிக்கு ஒரு மிகப்பெரிய லாபம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மாலை மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி ஒன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version