Connect with us

சினிமா செய்திகள்

‘உப்பென்னா’ பட நாயகி தனுஷுக்கு ஜோடியாகிறார்!!

Published

on

தெலுங்கில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘உப்பென்னா’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். யாரும் எதிர்பாராத வகையில் விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு நல்ல ரீச் கிடைத்தது. படமும் மெகா ஹிட் அடித்தது. புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் மிகப் பெரும் வரவேற்பை கொடுத்தனர். இந்தப் படம் மூலம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானார் நடிகை கீர்த்தி ஷெட்டி. அவருக்குத் தற்போது தெலுங்கில் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. 

படம் ரிலீஸ் ஆனது முதல் ரசிகர்களால் கொண்டாடப்படும் அவருக்கு இப்போது வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழில் தனுஷை வைத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார். ஹாலிவுட் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு வந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தை தனுஷ் முடித்துக் கொடுக்கிறார். அதைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

தனுஷ், இந்த இரு படங்களை முடித்துக் கொடுத்தவிட்டு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு அப் படத்திற்கான ஷூட்டிங் தொடங்க உள்ளது. 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா12 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!