தமிழ்நாடு

தமிழக அரசு மீது கிரண் பேடி கடும் தாக்கு: மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல்!

Published

on

தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. பெரும்பாலான நீர் நிலைகள் வற்றிவிட்டன. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. இதனால் தமிழகம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மக்களவையிலும் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக திமுக எம்பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து பேசுகின்றனர். பல்வேறு பிரபலங்கள் இதுகுறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இந்த தண்ணீர் பஞ்சம் குறித்து தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கிரண் பேடி, இந்தியாவின் 6-வது பெரிய நகரமான சென்னை, இந்தியாவிலே முதலாவதாக வறட்சியை நோக்கி செல்கிறது. அதே நேரத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சியமான அதிகாரிகள் என விளாசியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version