உலகம்

கிம் தலையில் ஒட்டப்பட்டிருந்த பேண்டேஜ்… உடல்நல பாதிப்பால் பறிதவிப்பா; பதற்றத்தில் வடகொரியா!!!

Published

on

டகொரியாவைச் சுற்றி நடக்கும் அத்தனையும் மர்மம்தான். தற்போது அதில் இன்னொரு மர்மத்தின் மர்மமாக சர்ச்சையைக் கிளப்பி வருவது அந்த நாட்டின் அதிபர் கிங் ஜோங் உன்னின் உடல்நிலைதான்.

வடகொரியா, தன் அணு ஆயுத சோதனைகள் மூலம் வல்லாதிக்க நாடான அமெரிக்காவையே மிரள வைத்தது. அதே நேரத்தில் அமெரிக்காவுடன் சமாதானம் பேசி பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள இறங்கி வந்தார் கிம். ஆனால், டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோதே அந்தப் பேச்சுவார்த்தை சுணக்கம் ஏற்பட்டது.

தற்போது மீண்டும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா ஆரம்பித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்ற சூழலை அடைந்துள்ளது.

இது ஒரு புறமிருக்க, கிம்மின் உடல்நிலை சமீப காலமாக கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும், அதனால் அவர் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும் வதந்திகள் கிளம்பின.

இதை மெய்ப்பிக்கும் வகையில் பல மாதங்களாக அவர் வடகொரிய அரசு நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 24 முதல் 27 ஆம் தேதி வரை வடகொரிய ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் கிம்.

அப்போது அவர் மண்டைக்குப் பின்னால் பேண்டேஜ் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. இதுவே அவரின் உடல்நலக் குறைவுக்கு ஆதாரமாக பலர் சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஆனால், உண்மை என்பது யாருக்குத் தெரியும்…

author avatar
seithichurul

Trending

Exit mobile version