சினிமா செய்திகள்

Kiara and Sidharth: மும்பையில் கோலாகளமாக நடந்த சித்தார்த் – கியாரா வரவேற்பு நிகழ்ச்சி..!

Published

on

பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி காதலிப்பதாகக் பலமுறை கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் தாங்கள் காதலிப்பதாகக் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 7 அன்று சித்தார்த் மல்கோத்ரா – கியாரா அத்வானியின் திருமணம் நடைப்பெற்றது. இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

சித்தார்த் மற்றும் கியாரா டெல்லி மற்றும் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். புது டெல்லி வரவேற்பு பிப்ரவரி 9 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மும்பை ஒன்று பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஷேர்ஷா படத்தில் கியாரா அத்வானியும், சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு அவர்கள் காதலிப்பதாக வதந்தி பரவியது. அவர்கள் காதல் குறித்து பல முறை கேள்வி கேட்கப்பட்டுள்ள்து. இருவரும் அதற்கு வெட்கப்பட்டு,அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்துவிடுவார்கள்.

இந்நிலையில் திருமணம் முடிந்தவுடன், திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களின் கீழ் திரைப் பிரபலங்கள், ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version