சினிமா செய்திகள்

காஞ்சனா படத்தில் கமீட் ஆன கியாரா அத்வானி!

Published

on

தமிழில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை இந்தியில் அக்‌ஷய்குமாரை வைத்து நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று ஆரம்பமானது.

இந்த படத்தில் எம்.எஸ். தோனி, பரத் எனே நேனு படங்களில் நாயகியாக நடித்த கியாரா அத்வானி, அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக கமீட் ஆகியுள்ளார்.

தமிழ் காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ராய் லக்‌ஷ்மி ஜோடியாக நடித்த வேடத்தில் இந்தியில் கியாரா அத்வானி நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு காஞ்சனா எனும் வெற்றி பெயருக்கு பதிலாக லக்‌ஷ்மி பாம் என்ற பெயரை ராகவா லாரன்ஸ் சூட்டியிருப்பதன் காரணம் தான் தெரியவில்லை.

seithichurul

Trending

Exit mobile version