சினிமா
கடுமையான காய்ச்சலில் செல்ஃபி பகிர்ந்து உடல்நலன் குறித்து அப்டேட் கொடுத்த குஷ்பு!
நடிகை குஷ்பு கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் உடல்வலி காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் தான் அட்மிட் செய்யப்பட்டிருப்பதாகவும் நடிகை குஷ்பு செல்ஃபி எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ’உங்கள் உடலில் ஏற்படும் அறிகுறிகளைச் எப்போதும் உன்னிப்பாகக் கவனியுங்கள். அதைப் புறந்தள்ளி விடாதீர்கள். அப்படி கவனிக்காமல் விட்டதால்தான் இப்போது மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். உடல் நிலை கடுமையாக பலவீனம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன். ஆனால் அது நீண்ட நாட்களாகும் என்று நினைக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார் குஷ்பு. குஷ்பு விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என திரைப்பிரபலங்களும், அரசியல் வட்டத்தைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.