விளையாட்டு

நீரஜ் சோப்ரா, மிதாலி ராஜ் உள்பட 12 பேர்களுக்கு கேல்ரத்னா விருது!

Published

on

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் உள்பட 12 பேர் உங்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேர்களுக்கு 2021 ஆம் ஆண்டின் கேல் ரத்னா விருது சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ரூபாய் 25 லட்சம் ரொக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு: நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் , இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், பாரா ஷூட்டர் அவனி லெகாரா, பாரா தடகள வீரர் சுமித் அன்டில், பாரா பேட்மிண்டன் வீரர்கள் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நகர், பாரா ஷூட்டர் மணீஷ் நர்வால், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன். மன்பிரித் சிங், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்,கால்பந்து வீரர் சுனில் சேத்ரி.

மேலும் அர்ஜுனா விருதுக்கு 35 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது வழங்கும் விழா நவம்பர் 13ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. விருது வழங்கும் விழாவின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து விருதுகளை விளையாட்டு வீரர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version