சினிமா செய்திகள்

’கேஜிஎப் 3’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தகவல்

Published

on

’கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் ’கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

’கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் ஆயிரத்து 1100 கோடியை தாண்டி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கும் என்று செய்திகள் வெளியானது. இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கேஜிஎப் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாகவும் 2024 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் ’கேஜிஎப் 3’ படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version