சினிமா செய்திகள்

விஜய்யின் ‘பீஸ்ட்’ உடன் மோதும் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதே தேதியில் யாஷ் நடித்த ’கேஜிஎஃப் 2’ என்ற திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

’கேஜிஎஃப் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து விஜய்யின் ’பீஸ்ட்’ மற்றும் யாஷின் ’கேஜிஎஃப் 2’ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது என்பது உறுதியாகியுள்ளது

இரண்டு திரைப்படங்களுக்கும் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version