சினிமா செய்திகள்
நீண்ட எதிர்பார்ப்புகளுடன் மிரட்ட வரும் கே.ஜி.எஃப்-2… வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஹொம்பாலே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கன்னட மொழியில் உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் ஹிட் அடித்த படம் கே.ஜி.எஃப். இந்தத் திரைப்படத்தின் மூலம் தேசிய அளவிலான சூப்பர் ஸ்டார் ஆக உருவானார் அப்படத்தின் நாயகன் யஷ்.
முதல் பகுதி வெறும் அறிமுக உரைகளாகவே கடக்க இரண்டாவது பகுதிக்காக ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கினர். 2019-ம் ஆண்டு முதல் பாகம் வெளியீட்டுக்குப் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. மிகுந்த பொருட் செலவில் மாபெரும் பட்ஜெட் படமாக ஜே.ஜி.எஃப் 2 வருகிற ஜூலை 16-ம் தேதி 2021 அன்று வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் யஷ் உடன் நாயகி ஆகி ஶ்ரீநிதி ஷெட்டி மற்றும் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர்.
Mark The Date????
History Gonna Repeat????
Or
History Gonna Creat????#KGFChapter2#KGFChapter2ReleaseDate#KGFChapter2onJuly16 pic.twitter.com/0fTzyJQSJO— KGF : Chapter 2 (@KGFChapter2) January 29, 2021