சினிமா செய்திகள்

ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்த ‘கேஜிஎஃப் 2’: 100 வருட தமிழ் சினிமாவில் ஒன்று கூட இல்லையே!

Published

on

நூறு வருடங்கள் பழமையானது என்று கூறும் தமிழ் சினிமாவில் ஒரு ஆயிரம் கோடி வசூல் செய்த படம் கூட வெளியாகாத நிலையில் கன்னட திரையுலகின் கேஜிஎஃப் 2’ திரைப்படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேஜிஎஃப் 2’ திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியாகி முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஆனது. ஒரே வாரத்தில் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் ஆன நிலையில் தற்போது 1000 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது .

இதுவரை இந்தியாவில் வெளியான திரைப்படங்களில் அமீர்கானின் ’டங்கல்’, எஸ்எஸ் ராஜமவுலியின் ’பாகுபலி 2’ மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது நான்காவது திரைப்படமாக கேஜிஎஃப் 2’ திரைப்படம் உள்ளது .

தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் போன்ற நடிகர்கள் இருந்தும் இதுவரை ஒரு திரைப்படம் கூட ஆயிரம் கோடி வசூல் செய்யவில்லை என்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது ஆயிரம் கோடி வசூல் செய்யும் அளவுக்கு தரமான பிரமாண்டமான படங்களை தமிழ் திரையுலகினர் உருவாக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version