கிரிக்கெட்

“மண்ட பத்திரம்..!”- ஆஸி., தொடரில் வென்ற இந்திய அணிக்கு பீட்டர்சனின் எச்சரிக்கை

Published

on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி, 2-1 என்ற ரீதியில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கேப்டன் விராட் கோலி, முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில் அனுபவமற்ற இளம் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணியை வீழ்த்தியுள்ளது பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கெவின் பீட்டர்சனும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவர், இந்திய அணிக்கு ஓர் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

பீட்டர்சன், தன் ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணியின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்து, இந்தியில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

‘இந்திய கிரிக்கெட் அணிக்கு, இது ஒரு வராற்றுச் சிறப்பு மிக்க வெற்றி தான். ஆகையில் இந்த வெற்றிக் கொண்டாடப்பட வேண்டும். அனைத்துத் தடைகளையும் மீறி இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.

அதே நேரத்தில் உங்களுக்கான உண்மையான சவால் என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூலம் வர உள்ளது. இங்கிலாந்து அணி, இந்தியாவுக்குப் பயணம் செய்ய உள்ளது. அவர்களை நீங்கள் உங்கள் இடத்தில் வீழ்த்தியாக வேண்டும்.

எனவே மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள். அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு அதீத கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து விடுங்கள்’ என்று வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version