கிரிக்கெட்

பான் – கார்டை தொலைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்: உதவிய வருமான வரித்துறை!

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தனது பான் கார்டு தொலைந்து விட்டதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்த நிலையில் அவருக்கு இந்தியாவின் வருமான வரித்துறை உதவி செய்துள்ளது .

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் கெவின் பீட்டர்சன் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் பணி செய்து கொண்டிருக்கும் அவர் விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளதாகவும் ஆனால் தனது பான் – கார்டை காணவில்லை என்றும் எனவே தனது பான் – கார்டை கண்டுபிடித்துக் கொடுக்கும் படி அவர் தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் அவர் அதற்கு பதிலளித்துள்ள இந்திய வருமான வரித்துறை உங்களிடம் பான் கார்டு குறித்த தகவல்கள் இருந்தால் உங்களுக்கு புதிய பான் கார்டு வழங்கப்படும் என்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுக்கான புதிய பான் கார்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன் கோரிக்கையை ஏற்று அவருக்கு உடனடியாக இந்திய வருமான வரித்துறை உதவி செய்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version