வணிகம்

முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உடன் கை கோர்க்க கோரிக்கை வைக்கும் கேரளா!

Published

on

சென்னை: தமிழ் நாடு அரசுடன் இணைந்து முதலீடுகளை ஈர்க்க கேரளா அரசு கோரிக்கை வைத்துள்ளது, இதனால் இரு மாநிலங்களும் பரஸ்பரம் பயனடைந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டின் முன்னோட்டமாக நடத்திய ரோட்ஷோவில் கேரளா தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் வியாழக்கிழமை உரையாற்றினார். இதில் இரு மாநிலங்களும் போட்டியாளர்கள் அல்ல, பங்குதாரர்களாக இணைந்து செயல்படலாம் என்றார்.

மாநிலத்தில் உள்ள அலுவலகங்க விதிமுறைகளை குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அனுமதிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அதிகாரிகளை தண்டிக்கும் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொழில் முனைவோர்களுக்கு ஏற்ற விதமான கொள்கைகளை அரசு உருவாக்கியுள்ளதாகவும், நிலம் பற்றாக்குறையால், தனியார் தொழில் பூங்காக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது என்றும், இந்த பூங்காக்கள் அரசு தொழில் பூங்காக்களுக்கு சமமான மரியாதையை பெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நிலம் உரிமையாளர்களை தொழில் வளர்ச்சியில் பங்காளிகளாக்க நிலத்தை ஒன்றிணைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும், இரு ஆண்டுகளில் 2.5 லட்சம் எம்எஸ்எம்இ-களை தேர்ந்தெடுத்து மற்றும் பதிவு செய்ய உள்ளதாகவும், 22 முக்கிய துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ராஜீவ் தெரிவித்தார்.

Tamilarasu

Trending

Exit mobile version