இந்தியா

மரம் வளர்த்தால் வட்டியில்லா கடன்… அசத்தும் கேரள கிராமம்!

Published

on

கேரளாவில் ஒரு பஞ்சாயத்து போர்டு அப்பகுதியில் உள்ளோர் மரங்களை வெட்டாமல் வளர்த்து வந்தால் வட்டியில்லா கடன் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள மீனங்காடி பஞ்சாயத்து போர்டு தான் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க இத்தகைய சூப்பர் சலுகையை மக்களுக்காக அறிவித்துள்ளது. அந்த பஞ்சாயத்து போர்டின் கீழ் இயங்கும் வங்கியில் ‘மரம் வங்கி’ என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் அப்பகுதி மக்களுக்குப் பலன் தரும் பல வகை மரங்கள் காசு கொடுத்து வழங்கப்படும். ஒரு மரத்துக்கு 50 ரூபாய் என வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படும். அந்த் மரங்களை மூன்று ஆண்டுகள் வளர்த்தால் இந்தப் பணம் வழங்கப்படும். அதன் பயன்களை வாங்கி வளர்ப்பவரே எடுத்துக் கொள்ளலாம். மேலும், அந்த மரங்களை வெட்டாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்த்தால் வாங்கிய கடனை கொடுக்கவே வேண்டாம். பஞ்சாயத்து வங்கியின் இந்தத் திட்டத்துக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

Trending

Exit mobile version