இந்தியா

மாம்பழ சின்னத்தைக் கண்டு அலறும் அரசியல் கட்சிகள்..!- பின்னணி என்ன?

Published

on

கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பினர் போட்டியிட்டு வெற்றிகளை அள்ளிக் குவித்து உள்ளனர்.

கேரளாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பெயர் ட்வென்டி 20. இதனது நிறுவனராக சாபு ஜேக்கப் உள்ளார். இவருக்கு அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் தொண்டு நிறுவனம் மூலம் ஏரி தூர்வாருதல், குளம் அமைத்தல், சாலை வசதி ஏற்படுத்தித் தருதல் போன்ற சமுக பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வேண்டுகோளை ஏற்று தொண்டு பணியாளர்கள் பஞ்சாயத்துகளில் போட்டியிட்டுள்ளனர். பெரும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இந்த தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பல இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த தொண்டு அமைப்பினரின் கட்சி சின்னம்தான் மாம்பழம். கேரள பெரும் அரசியல் கட்சிகள் தற்போது இந்த மாம்பழ சின்னத்தைக் கண்டு அலறி வருகிறார்களாம்.

தேர்தலில் வென்ற திண்டு நிறுவன தன்னார்வலர்கள் தற்போது ஊராட்சி, பஞ்சாயத்துத் தலைவர்கள் எனப் பதவியில் அமர்ந்துகொண்டு தங்களது தொண்டு பணிகளைத் தொடர்ந்து வருகின்றனராம்.

Trending

Exit mobile version