சினிமா செய்திகள்

’ஜெய்பீம்’ படத்திற்கு பாராட்டு தெரிவித்த கேரள எம்.எல்.ஏ சைலஜா டீச்சர்!

Published

on

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட ஒரு சிலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கேரள மாநில சட்டமன்ற உறுப்பினர் சைலஜா டீச்சர் அவர்களும் ’ஜெய்பீம்’ படத்திற்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். ஜெய் பீம் திரைப்படம் மாற்றத்திற்கான ஆரம்பப்புள்ளி என்றும் சமூகத்தில் வேரூன்றி இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை உண்மைக்கு மிக நெருக்கமாக சித்தரித்திருக்கிறார்கள் என்றும் படக்குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு அண்டை மாநில எம்எல்ஏ ஒருவர் பாராட்டு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version