இந்தியா
இளம்பெண் மேயருக்கும், இளவயது எம்.எல்.ஏவுக்கும் திருமணம்: குவியும் வாழ்த்துக்கள்!
மேயர் பதவியில் இருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இளம் வயது எம்எல்ஏ ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சட்டசபை தேர்தலில் மிக இளம் வயது எம்எல்ஏவாக தேர்வு பெற்றவர் சச்சின் தேவ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவிலேயே மிக குறைந்த வயதில் எம்எல்ஏவான இவரை இந்தியாவிலேயே மிக குறைந்த வயதில் மேயரான ஆர்யா என்ற பெண் திருமணம் செய்ய உள்ளார்.
இந்த திருமணத்தை இரு வீட்டாரின் குடும்பத்தினர் தற்போது பேசி முடித்து விட்டதாகவும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே மிக இளவயது எம்எல்ஏவும், இந்தியாவின் மிக இளவயது மேயரும் தம்பதிகளாக உள்ளதை அடுத்து இந்த ஜோடிக்கு கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.