தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகம் செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து:

Published

on

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தென்னிந்திய ரயில்வே அதுகுறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த விபரம் இதோ:

1. சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயில்(02697) மே 9-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளது. திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரலுக்கு சனிக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயில்(02698) மே 8-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

2. சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரத்துக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்(02695) மே 8-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையும், திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்(02696) மே 9-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படவுள்ளது.

3. திருநெல்வேலி-பாலக்காடுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்(06791) மே 8-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையும், பாலக்காடு-திருநெல்வேலிக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06792) மே 9-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

4. திருச்சிராப்பள்ளி-பாலக்காடு டவுனுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்(06843) மே 8-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையும், பாலக்காடு டவுன்-திருச்சிராப்பள்ளிக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்(06844) மே 9-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படவுள்ளது.

5. சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்(06075), மறுமார்க்கமாக, கேஎஸ்ஆா் பெங்களூரு-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06076) ஆகிய இரண்டு ரயில்கள் மே 8-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன.

6. சென்னை சென்ட்ரல்-மங்களூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்(06627) மே 9-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரையும், மங்களூா்-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06628) மே 8-ஆம்தேதி முதல் மே 31-ஆம்தேதி வரையும் ரத்துசெய்யப்படுகிறது.

7. மங்களூா்-நாகா்கோவிலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்(06605) மே 8-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளது. நாகா்கோவில்-மங்களூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில்(06606) மே 9-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

8. சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களுரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்(06079-06080) மே 8-ஆம் தேதி முதல் மே 31-ஆம்தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன.

இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version