இந்தியா

மால்கள், வணிக வளாகங்களில் வாகன கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published

on

மால்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வாகன கட்டணங்கள் வசூலிக்க உரிமை இல்லை என கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள மால்கள், வணிக வளாகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வாகனம் நிறுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வழக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் வாகன கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கேரள நீதிமன்றம் இதுகுறித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் வணிக வளாகங்கள், மால்கள் ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க மால் உரிமையாளர்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்களுக்கு உரிமை இல்லை என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கட்டிடத்தின் விதிகளின்படி வாகன நிறுத்துவதற்கு போதுமான இடம் இருந்தால் மட்டுமே அந்த கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உண்டு என்றும் அவ்வாறு இருக்கும்போது வணிக வளாகங்களுக்கு தனியாக வாகன கட்டண வசூல் செய்ய உரிமை இல்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version